
உத்தேச மின்சாரத்துறை மறுசீரமைப்பு சட்டமூலம் நேற்று (30) அமைச்சரவையில் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் இலங்கை மின்சார சபையின் சேவைகளை வெளிப்படைத்தன்மை, போட்டி ஆகியவற்றை மேம்படுத்துவதுடன், மின்சாரத் துறையில் தனியார் துறை பங்கேற்பையும் அனுமதிப்பதோடு வளர்ச்சி முகமைகள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களின் ஆற்றல் மற்றும் சட்ட வல்லுனர்களின் உதவியுடன் கடந்த 10 மாதங்களில் இந்த மசோதா தயாரிக்கப்பட்டதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினுடைய எக்ஸ் தளத்தின் பதிவில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சட்ட வரைவாளர் திணைக்களத்தினால் சட்ட வரைவுத் திணைக்களத்தினால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் இணைக்கப்பட்டதன் பின்னர் கடந்த வாரம் சட்டமா அதிபரின் சான்றிதழைப் பெற்றதாகவும் அமைச்சரவை இந்த சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்கியதும், அது வர்த்தமானியாக வெளியிடப்பட்டு, ஒப்புதலுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.