
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கட்டணத்திற்கு உட்பட்டு தள்ளுபடி செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, இராஜாங்க அமைச்சர் பிரித்தானிய பிரஜாவுரிமையையும் பெற்றுள்ளதால், அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவின் பெரும்பான்மை இணக்கப்பாட்டுடன் இந்த மனு இரத்துச் செய்யப்படுவதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன திறந்த நீதிமன்றில் தெரிவித்தார்.
இதேவேளை, அக்டோபர் 18 ஆம் திகதி தீர்ப்பு வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இன்று ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.