
தற்போதுள்ள ஓட்டுநர் உரிமத்திற்குப் பதிலாக QR குறியீடுகளுடன் ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் திட்டத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தொடங்கியுள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க, டிஜிட்டல் அல்லது ஸ்மார்ட் ஓட்டுநர் உரிமங்களை அறிமுகப்படுத்தும் திட்டம், ஒக்டோபர் மாதம் அமைச்சரவை அனுமதியைப் பெற்றதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்டதாக ஊடக அரிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலதிக விபரங்களை வழங்கிய மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், கடந்த ஒக்டோபர் 16 ஆம் திகதி இலங்கை இராணுவம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுதல் மற்றும் வழங்குதல் ஆகியவற்றை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் ஒப்படைத்ததன் பின்னர் அச்சடிக்கும் பணி QR குறியீட்டுடன் மாற்ற முடிவு எடுக்கப்பட்டதுடன் குறியீடுகளுக்கான தனி மொபைல் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகம் மற்றும் பொலிஸாரினால் மட்டுமே குறித்த குறியீடு இயக்கப்படும் எனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்,
போக்குவரத்து குற்றங்களுக்காக டிமெரிட் புள்ளி இடும் முறையும் குறித்த ஸ்மார்ட் ஓட்டுநர் உரிமத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.