
பால்மா பக்கெட்டுக்களின் விலையினை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
இதன்படி, 400 கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் 400 கிராம் பால்மா பக்கெட் ஒன்று 948 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பொருளாதார நெருக்கடி நிலையிலுள்ள பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், லங்கா சதொச நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதிலும் உள்ள விற்பனை நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் பால் மா பொதிகளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதை உணர்ந்து லங்கா சதொச நிறுவனம் தற்போது அதிகளவான உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை சலுகை விலையில் விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.