
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற விசேட திட்டத்தின் மூலம் ஒன்பது மாகாணங்களினையும் உள்ளடக்கியதாக சுகாதார மற்றும் கல்வித் துறைகளுக்கு ஒன்பது பில்லியன் ரூபாவழங்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்த்துள்ளார்.
இதன்படி, அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் மாகாண சபைகளுக்குட்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் நிரந்தரமற்ற 8400 பணியாளர்கள் நிரந்தர அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (02) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர குறிப்பிட்டார்.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
“GIS”மற்றும் “GPS Mapping” ஆகியவை ஊடாக அனைத்து உள்ளூராட்சி சபை வீதிகளும் பட்டியிலிடப்பட்டு ஒழுங்கமைக்கப்படவுள்ளதாகவும் இத்திதிடத்தின் முதல் கட்டமாக வடமேற்கு மாகாணத்தில் அதனை நடைமுறைப்படுத்தியுள்ளோம் எனவும் குறித்த செயற்த்திட்டல் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளதுஎனவும் தெரிவித்தார்.
மேலும், வட மத்திய மற்றும் வட மாகாணங்கள் தற்போது வீதிகளை அடையாளம் கண்டு, பட்டியலிடும் பணி முடித்துள்ளதாகவும் 31.12.2023 க்கு முன்னர் அந்த இரண்டு மாகாணங்களிலும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதோடு எஞ்சிய 06 மாகாணங்களுக்கான காலவரையறை தயாரித்து பயிற்சிகளை வழங்கி 2024 ஆம் ஆண்டில் இலக்கை அடைய எதிர்பார்க்கப்படுவதக்கவும் குறிப்பிட்டார்.
எமது அமைச்சின் கீழ் உலக வங்கியின் ஆதரவின் கீழ் செயற்படுத்தப்பட்ட செயற்திட்டத்தின் மூலம் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய சுகாதார மற்றும் கல்வித் துறைக்கு ஒன்பது பில்லியன்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதுடன் சுகாதார துறைக்கு 4,500 மில்லியன் வழங்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் அந்தந்த மாகாணங்களின் சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
அத்தோடு, குறித்த மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுடைய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக மேலும் 4,500 மில்லியனை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்படும் இத்திட்டம் 06 மாதங்களுக்குள் நிறைவடையும் எனவும் மாகாண சபைகளுக்கு உட்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் நிரந்தரமற்ற 8,400 ஊழியர்களை நிரந்தரமாக்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தவுடன் அவர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதோடு அவர்கள் சுமார் 15 வருடங்களாக சேவையில் இருப்பவர்கள். மாகாண சபைகளில் 10,000 பணியாளர்களின் வெற்றிடங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஒன்லைன் முறையில் கொடுப்பனவுகளை செலுத்துதல், அபராதம் செலுத்துதல், இடமாற்றம் செய்தல் தொடர்பாக அடுத்த 02 வாரங்களில் மென்பொருள் தயாரித்தல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதக்கவும் அதன் முதல் கட்டத்தின் கீழ், மத்திய மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தில் ஓன்லைன் முறை மூலம் பணம் செலுத்துவது 30.11.2023 ஆம் திகதிக்குள் தொடங்கப்பட உள்ளதாகவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார்.