
டிஜிட்டல் பொருளாதாரம் என்பது தெரிவு மாத்திரமல்ல அது தேவையாகும் என்றும் அதற்காக கல்வித்துறையில் மனித வளத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (03) நடைபெற்ற INFOTEL தகவல் தொழில்நுட்பக் கண்காட்சியினுடைய ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு என்ற வகையில் தொழில்நுட்பத் துறையில் முன்னேற்றம் அடைய சிறிது காலம் தேவை எனவும் கல்வி மற்றும் சந்தை மூலோபாயம் ஆகிய துறைகளில் உள்ள சவால்களுக்கு ஈடுகொடுப்பதற்கான ஆதரவை வழங்குமாறும் நவீன இலங்கையைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி பங்குதாரர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அத்தோடு, டிஜிட்டல் மயமாக்கலை பாடசாலைகளில் முன்னெடுக்கும் போது, ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்காக அரச மற்றும் தனியார் துறைகளின் கூட்டு முயற்சி அவசியமெனவும் தொழில்நுட்ப மற்றும் பட்டம் பெற்றதன் பின்னரும், பாடசாலைக்குப் பின்னரான காலத்திலும் பயிற்சி வாய்ப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தினையம் ஜனாதிபதிவலியுறுத்தியதோடு இலாப நோக்குடன் அல்லது இலாப நோக்கம் இன்றி தொழில்பயிற்சி பிரிவினர் குறிப்பிட்ட பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும், பயிற்சி தொழிலாளர்களின் கேள்விக்கமைய அதற்கு அவசியமான நிறுவனங்களை நிறுவ எதிர்பார்ப்தைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், உலகின் மிகப்பெரிய biometric அடையாள அட்டை முறையான ஆதார் (Aadhaar) அட்டைகளினுடைய முக்கியத்துவத்தினையும் அதனை இலங்கையின் டிஜிட்டல் புவிசார் தெரிவுக் கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டியதன் அவசியத்த்தினையும் குறிப்பிட்டதோடு அதற்க்கான முன்னெடுப்புகள் இந்திய அரசாங்கத்துடன் மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், கல்வி அமைச்சர் சுசுல் பிரேமஜயந்த, தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, தொழில்நுட்ப அமைச்சின்செயலாளர் பேராசிரியர் என்.டீ.குணவர்தன மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் நிபுணர்கள், அறிவியலாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.