
கிராம நிர்வாக அலுவலர்களின் சேவைகளுக்கு திருப்திகரமான கொடுப்பனவுகள் வழங்கப்படும் வரை, கடந்த புதன் கிழமை (01) ஆரம்பிக்கப்பட்ட மக்கள்தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்கு அகில இலங்கை கிராம சேவை உத்தியோகத்தர்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் தொடர்பில் அதிகாரிகளும், மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபர திணைக்களமும் தன்னிச்சையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கிராம சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் ஜகத் சந்திரலால் குற்றம் சுமத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஆரம்ப கட்டமான மேப்பிங் நடவடிக்கைகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் மேலும் வலியுறுத்தினார்.
இதன்படி, பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் 15வது சனத்தொகை மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பு கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமானது குறிப்பிடத்தக்க விடையமாகும்.