
நுவரெலியாவிற்கு அடையாள சின்னமாக கடந்த 130 வருடங்களுக்கு மேலாக திகழும் நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதற்கு எதிராக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் இன்று செவ்வாய்க்கிழமை (07) தபால் நிலையத்திற்கு முன்பாக கைகளில் பதாகைகளை தாங்கியவாறு தமது எதிர்ப்பினை வெளிக்காட்டியுள்ளனர்
இதன்படி, இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதற்கு எதிராக செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், பழமையான கட்டிடத்தினை தன்வசமாக்குவதற்காக அரசாங்கம் முயற்சிகள் முன்னெடுத்து வருவதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா பிரதான தபால் நிலையத்தை சுற்றி கருப்பு கொடி கட்டியும் , தற்போதைய அரசுக்கு எதிரான வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கட்டிடத்தில் காட்சிப்படுத்தி தொடர்ந்தும் எதிர்ப்பினை வெளிக்காட்டி வருகின்றனர்.