
(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் அனுசரணையில் கல்முனை தொகுதியில் பொது மக்களுக்கு சேவை செய்து மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த சேவை புயல் மறைந்த முன்னாள் வர்த்தக வாணிப துறை அமைச்சர் மறைந்த(மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் பெயரில் கல்முனை அல்-பஹ்றியா தேசிய பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாட்டை விருத்தி செய்யும் முகமாக நவீன இலத்திரனியல் வகுப்பறை திறப்பு மற்றும் திறன் பலகை (Smart Board) வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசலின் தலைமையில் நேற்று (07) இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம்,கௌரவ அதிதியாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச்செயலாளரும்,கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களும்,விசேட அதிதிகளான பிரதி அதிபர்கள் எம்.ஏ.சலாம் மற்றும் ஈ.றினோஸ் ஹஜ்மீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பாடசாலையின் பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,பழைய மாணவர் சங்கச் செயலாளர் எம்.ஐ.எம்.ஜிப்ரி,பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள்,பாடசாலையின் முன்னாள் பிரதி அதிபரும் றியாலுல் ஜன்னாஹ் பாடசாலையின் தற்போதைய அதிபருமான எம்.ஏ.அஸ்தார்,ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள்,மாணவர்களின் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வின் அங்கமாக தரம் 1-5 வரையான வகுப்புகளில் முதலாம்,இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும்,மாணவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
மேலும் நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் முன்னாள் பிரதி முதல்வர் ஆகியோருக்கு பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச்சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.