
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முதன்மைத் தொழில் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஐந்து நிறுவனங்கள் தங்களின் வருடாந்திர ஈவுத்தொகையை முறைப்படி நேற்று (10) கருவூலத்திற்கு 925 மில்லியன் ரூபாவினை அளித்தன.
இதன்படி, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையானது 350 மில்லியன் ரூபவாவும் .இலங்கை பாஸ்பேட் கம்பனி லிமிடெட் மூலம் 300 மில்லியன் ரூபாயும். பிசிசி லங்கா மற்றும் நேஷனல் சால்ட் கம்பெனி மூலம் தலா 100 மில்லியன் ரூபாவும் மற்றும் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தினால் 75 மில்லியன் ரூபவாவும் ஆண்டு ஈவுத்தொகையாக கருவூலத்திற்கு செலுத்தியதாகவும் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை உயர்த்துவதில் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயான கூட்டு முயற்சியை இது எடுத்துக்காட்டுவதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இந்நிகழ்வில், ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, பங்களிப்பு வழங்கும் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.