
பாராளுமன்றத்தில் அண்மையில் கூடிய எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவினால்
பேருந்துகளில் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தினை கட்டாயமாக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, பயணிகள் பேருந்துகளுக்கு வீதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தினை கட்டாயமாக்குமாறு குழுவின் தலைவர் நாலக பண்டார கோட்டேகொட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதுடன் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டியதன் அவசியத்தை கலந்துரையாடலில் கலந்துகொண்ட பொலிஸ் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இதேவேளை, தற்போது இலங்கையில் உள்ள பெரும்பாலான நெடுஞ்சாலைகள் நஷ்டத்தினை சந்தித்து வருவதாகவும், இலாபம் ஈட்டும் நெடுஞ்சாலைகளின் இலாபத்திலேயே நஷ்டத்தில் இயங்கும் நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்படுவதாகவும் குறித்த கலந்துரையாடலின்போது தெரியவந்துள்ளதுடன் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் QR குறியீட்டு முறைமையினை பயன்படுத்தி சுங்கக் கட்டணம் செலுத்தும் செயற்திட்டத்தினை முன்னெடுக்குமாறும் எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவினுடைய தலைவர் அதிகாரிகளுக்கு இவ்விடயம் தொடர்பில் அறிவுறுத்தியுள்ளார்.