
இந்த ஆண்டு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை மட்டும் உயர்த்தாமல், ஒட்டுமொத்த மக்களுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மறைமுக வரிகளை ஏதாவது ஒரு வகையில் குறைத்து முறையான கண்காணிப்பை மேற்கொண்டால் நாட்டு மக்கள் அனைவரும் இதன் மூலம் பயனடைவார்கள் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார புள்ளிவிபரவியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.