
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சர் என்ற வகையில் பாராளுமன்றில் இன்று (13) சமர்ப்பித்தோடு உரையாற்றினார்.
இதன்படி, இலவச நிவாரணங்கள், அதிகப்படியான சம்பளம், தேவையற்ற செலவுகள் காரணமாக நாங்கள் உலகில் கடன்பட்டு வங்குரோத்தான நிலையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எங்களுடன் மக்களும் ஒத்துழைத்தனர்.
தடம்புரண்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பினோம். நீண்டகால திட்டங்களை உருவாக்கும் நேரம் வந்துவிட்டது. அரசியல் இலாபம் கருதி மட்டும் செய்யப்படும் வேலைகள் வெற்றியளிக்காது என்பதே வரலாறு கற்றுத்தந்த பாடம். அரசியல் தேவைகளுக்காக பொய் சொல்லவேண்டாம்.
பொருளாதார பிரச்சினைகளுக்கேற்ற ஊதியம் இல்லை. மின்சார, வர்த்தக உற்பத்தி துறைகளில் நெருக்கடி உள்ள குறித்த இந்த பயணம் சிரமம் என்றாலும் அதில் செல்லவேண்டிய தேவை எமக்குள்ளதோடு சம்பளத்தினை கண்டபடி அதிகரிக்க முடியாது. அரச வருமானத்தை அதிகரித்தால் மட்டுமே குறித்த சம்பள உயர்வானது சத்தியம்.கடன் வாங்கியோ அல்லது பணத்தை அச்சிட்டோ நாங்கள் அதனை செய்தால் பொருளாதாரம் மேலும் மோசமடையும்
மேலும், கற்பனைக் கதைகளால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது எனவும்நீண்ட காலமாக அரசியல் கட்சிகளினால் வழங்கப்பட்டு வந்த தேர்தல் வாக்குறுதிகளினுடைய இறுதி முடிவானது நாட்டை வங்குரோத்து நிலையினை அடையச் செய்ததுள்ளதுடன் துரதிஷ்டவசமாக நாட்டில் உள்ள சில தரப்பினர் இதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை, அரச வரிவருமானம் எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லை. அதனை அதிகரிக்க வேண்டும். வரி அறவீட்டை மறுசீரமைக்க வேண்டும். அரச வருமானம் அதிகரித்தால் வரி நிவாரணம் வழங்கலாம்மோடியும் எனவும் மக்களின் பணத்தை திருடியவர்கள் மட்டுமல்ல நாட்டின் எதிர்காலத்தை திருடியவர்களையும் கண்காணிக்கப்பட வேண்தீயவர்கள் எனவும் திருகோணமலை எண்ணெய் சேமிப்பு நிலையத்தின் அபிவிருத்தி, நுவரெலியா தபால் நிலைய கட்டிட விவகாரம் என்பன எதிர்கால பொருளாதார மேம்பாட்டிற்கானவை. ஆனால் அவற்அவற்றினை தடுப்பது அநீதி. அரச வளங்களை காக்கவேண்டும். ஆனால் அவை பயனுள்ளதாக்கப்படவேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனதுரையில் தெரிவித்தார்.