
2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (13) வருவாய் நிர்வாகத்தின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக புதிய வருவாய் அதிகார சபையொன்றை ஸ்தாபிப்பதாக உறுதியளித்தார்.
“அரசாங்க வருவாயினை அதிகரிப்பதற்காக சமீபத்தில் எடுக்கப்பட்டிருந்த பல சீர்திருத்த நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ள நிலையில் வருவாய் நிர்வாகத்தின் செயல்திறனை அதிகரிப்பதற்கும், சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதற்கும், காலாவதியான அரசாங்க விதிமுறைகள் போன்ற தடைகளைத் தவிர்ப்பதன் மூலம் மனித வளம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கும், நவீன, திறமையான மற்றும் தடையற்ற வருவாய் நிர்வாக முறையினை உருவாக்குவதற்கும் சர்வதேச அனுபவத்தினை கருத்தில் கொண்டு குறித்த வருவாய் ஆணைக்குழுவினை அமைப்பதற்கும் நிதி அமைச்சகத்தின் கீழ் ஒரு சிறப்புத் திட்ட குழுவை உருவாக்க்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததார்.
மேலும், வருவாய் அதிகாரசபையை ஸ்தாபிப்பது தொடர்பிலான விடயங்களை ஒருங்கிணைக்க விசேட திட்டக் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி முன்மொழிந்தார்.