
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் 2024 ஆம் ஆண்டு டிஜிட்டல் மயமாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இதன்படி, இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் 2024 வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றிய ஜனாதிபதி, இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டில் 200 மின்சார பஸ்களை இயக்கும் முன்னோடித் திட்டமும் 2024 இல் ஆரம்பிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
மேலும், வரலாற்று சிறப்புமிக்க கண்டி நகரின் வாகன மற்றும் பயணிகள் போக்குவரத்தை சமாளிக்கவும், ரயில், பஸ் மற்றும் பிற டாக்ஸி சேவைகளை ஒருங்கிணைக்கவும் உலக வங்கியின் கடன் உதவியின் கீழ் கண்டியில் பல போக்குவரத்து மைய திட்டம் ஜனவரி 2024 இல் செயல்படுத்தப்படும் எனவும் இதற்க்கு 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை, அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை வரையிலான புகையிரதப் பாதையின் புனரமைப்புப் பணிகளை 2024 ஜனவரிக்குள் ரயில்வே திணைக்களம் பூர்த்தி செய்யும் எனவும் இதற்காக 2024 பட்ஜெட் மூலம் 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு, வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம்; கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதி சீனாவுடன் இணைந்து ஆரம்பிக்கப்படஉள்ளதாகவும் “குருநாகலிலிருந்து கலகெதர வரையான பகுதியின் நிர்மாணப் பணிகளுக்கு ஜப்பானின் ஆதரவைப் பெறுவோம் என அவர் நம்புவதுடன் “கடுகஸ்தோட்டை வரையான நெடுஞ்சாலையை அமைக்க முடியுமா என்பதை ஆராய்வதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.