
250 மெற்றிக் தொன் சர்க்கரையை பதுக்கி வைத்திருந்ததற்காக, இலங்கையில் உள்ள முன்னணி சர்க்கரை இறக்குமதியாளருக்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்குக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு சீல் வைத்துள்ளது.
இதன்படி, செவ்வாய்க்கிழமை (14) பேலியகொட மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான சோதனைகளின் போது தொடர்புடைய சேமிப்பு கிடங்கானது சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையில் (எம்ஆர்பி) பட்டியலிடப்பட்டதை விட அதிக விலைக்கு தொடர்புடைய சர்க்கரையை விற்பதற்காக, 5 மெட்ரிக் டொன் சர்க்கரையை பதுக்கி வைத்திருந்ததற்காக, மற்றொரு மொத்த விநியோகஸ்தரினுடைய இடமும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின்விசாரணை அதிகாரிகள், எம்ஆர்பியை விட அதிக விலைக்கு சர்க்கரை விற்ற குற்றச்சாட்டின் பேரில், மேற்கூறிய மொத்த விற்பனையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.