
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
மேலும், தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையானது ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதோடு, இதில் மொத்தமாக 337,956 பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.