
பன்னிபிட்டிய, மபுல்கொட பிரதேசத்தில் உள்ள புத்தக விற்பனை நிலையமொன்றில் இன்று (20) நபர் ஒருவர் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
குறித்த புத்தக கடைக்கு வந்த சந்தேக நபர், கடையின் உரிமையாளரை தாக்கியுள்ளதோடு சம்பவத்தில் தலையிட முயன்ற மற்றொருவருக்கும் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், காயமடைந்த இருவரும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.