
ஜனரஞ்சகமான தீர்மானங்களை எடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடைந்த யுகத்திற்கு கொண்டு செல்வதில் அரசாங்கத்திற்கு நம்பிக்கை இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐந்தாவது தேசிய இளைஞர் பாராளுமன்றத்தின் 05 ஆவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்தோடு, 2022 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் நிலவிய நிலைமைக்கும் தற்போதைய நிலைமைக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாகவும், நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தில் இளைஞர் சமூகத்தினரின் பங்களிப்பும் தேவைப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினர்.
மேலும், இலங்கை இன்று எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு 2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை திறம்பட பயன்படுத்துவதற்கு இளைஞர்களின் யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெறுவதே இந்த அமர்வின் கருப்பொருளாகும்.