
திங்கட்கிழமை (20) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரத் துறை சீர்திருத்தங்களுக்கான உத்தேச மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்தார்.
இதன்படி, X யில் (முன்னாள் ட்விட்டர்) ஒரு பதிவில், புதிய மசோதா அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டு அதன் ஒப்புதலுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதும்புதிய மின்சாரச் சட்டம் இலங்கை மின்சார சபையின் சேவைகளை மறுசீரமைக்கவும் உதவும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பதிவிட்டுள்ளார்.
மேலும், புதிய சட்டம் இலங்கை மின்சார சபையின் செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்தும் என்றும் மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் தனியார் துறை பங்கேற்பையும் இது அனுமதிக்கும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்தார்.