
தான் முன்வைத்திருந்த கூற்றினுடைய விபரங்கள் அடங்கியிருந்த கோவையை ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் பறித்துச் சென்றதாக, எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச, இன்று செவ்வாய்க்கிழமை (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்படி, நாட்டை வங்குரோத்தடைய உழைத்தவர்கள் தொடர்பிலும் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி ராஜபக்ஷர்களிடம் இருந்து நட்டடினை மீட்பீர்களா? என்றும் பாராளுமன்றத்தில் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளதோடு ஆளும் கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதிலும் பாடசாலை மாணவர்கள் அமர்ந்திருப்பதால் தொடர்ந்தும் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
அத்தோடு,. குறித்த சம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார வீடியோ எடுத்ததோடு அவ்வாறு காணொளி எடுக்க வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நளின் பண்டாரவிடம் கேட்டுக்கொண்டார்.
ஆளும் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி எதிர்க்கட்சித் தலைவர் தனது கேள்வியை முன்வைத்ததையடுத்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆசனங்களில் இருந்து எழுந்து எதிர்க்கட்சித் தலைவரை அணுகியா நிலையில் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ மற்றும் ஏனைய சேவிதர்கள், எதிர்க்கட்சித் தலைவரின் அருகில் வந்து அவரைப் பாதுகாப்பதைக் காணமுடிந்தது.
இதையடுத்து அவையை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, மீண்டும் 11.14க்கு ஆரம்பித்தார்.
இதன்போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எனது கையிலிருந்த ஆவணத்தினை ஆளும் கட்சி உறுப்பினர்களான சனத் நிஷாந்த அபகரித்ததோடு அதனை, சமர விக்ரமவிடம் கொடுத்தா நிலையில் அத்தனையும் பிரதமர் முன்னிலையிலேயே நடந்தததாகவும் தெரிவித்தார்.
மேலும், என்னுடைய கையில் இருந்த ஆவணத்தினை இவ்வாறு அபகரிக்க முடியுமா? இல்லை என்றால் 22/7இன் கீழ், எனக்கு சிறப்பு அறிக்கையினை வெளியிட உரிமை இல்லையா? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.