
உள்ளுராட்சித் தேர்தல்கள் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமைகள் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று (21) விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதன்படி, குறித்த மனுக்கள் 09 மார்ச் 2024 அன்று விசாரிக்கப்படுமென பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட, காமினி அமரசேகர மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஐவரடங்கிய உச்ச நீதிமன்றில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் நீதியரசர் ஜயவர்தன இன்றைய நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, மாற்றுக் கொள்கைகள் மற்றும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கைக்கான மையம் (PAFFREL) ஆகியோர் இந்த மனுக்களை முன்வைத்துள்ளனர்.