New Updates! Fresh news just arrived.

விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது 10 புதிய பேருந்துகள்!...

News

விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது 10 புதிய பேருந்துகள்!

February 10, 2026 4:04 pm
விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது 10 புதிய பேருந்துகள்!
'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியினை பயன்படுத்தி, விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளோடு கூடிய, குளிரூட்டப்பட்ட தாழ்தள பேருந்து சேவையினை ஒரு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்த அரசாங்கமானது தீர்மானித்துள்ளது.

இதற்காக 10 பேருந்துகளினை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் 15 ஆம் திகதி குறித்த பேருந்துகள் நாட்டை வந்தடையவுள்ளன.

குறித்த பேருந்துகளினை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும்த் தேவையான பௌதீக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளினை வழங்க இலங்கை போக்குவரத்து சபைக்கு இயலுமை இல்லை என தெரியவந்துள்ளது.

ஆகவே, பேருந்துப் போக்குவரத்தினை நவீனமயமாக்கும் முதற்கட்டமாக, நவீன வசதிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட 100 பேருந்துகளினை கொழும்பு நகரில் சேவையில் ஈடுபடுத்தும் திட்டத்திற்காக, கடந்த வருடம் ஜூலை 21 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய, இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட லங்கா மெட்ரோ ட்ரான்சிட் (தனியார்) நிறுவனத்திடம் குறித்த 10 பேருந்துகளினையும் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பேருந்துகளினையும் அவற்றின் இயக்க நடவடிக்கைகளினையும் அந்த நிறுவனத்தின் கீழ் முன்னெடுப்பதற்குப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now