இறக்குமதி செய்யப்பட்ட 1,025 வாகனங்கள் துறைமுகத்தில் முடக்...
News
இறக்குமதி செய்யப்பட்ட 1,025 வாகனங்கள் துறைமுகத்தில் முடக்கம்!
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,025 வாகனங்களினை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து விடுவித்துக் கொள்ள இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாகியும் 625 வாகனங்கள் உள்ளதாக இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
குறித்த வாகனங்களில் எவ்விதமான சுங்கக் குற்றங்களும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதோடு, எவ்வித சுங்கக் குற்றங்களும் இன்றி விடுவிக்கப்படாத வாகனங்களினை சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 129 ஆவது பிரிவுக்கு அமைவாக ஏலத்தில் விடுவதற்கோ அல்லது டெண்டர் கோரி விற்பனை செய்வதற்கோ எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற எந்தவொரு பொருளினையும் ஒரு மாதத்திற்குள் அதற்குரிய அனைத்து வரிகளினை செலுத்தி விடுவித்துக்கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறும் பட்ச்சத்தில் குறித்த சட்டத்தின் கீழ் அவற்றை விற்பனை செய்து, குறித்த பணத்தின் மூலம் அரசாங்கத்திற்குத் தேவையான வரித் தொகையினை அறவிட்டுக்கொள்வதற்குத் தேவையான ஏற்பாடுகளானது உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உரிய வரிகளினை செலுத்திய பின்னர் எஞ்சியிருக்கும் தொகையினை கொண்டு துறைமுக மற்றும் களஞ்சியக் கட்டணங்களினை செலுத்த முடியும்.
குறித்த கட்டணங்களைச் செலுத்திய பின்னரும் எஞ்சியத் தொகைளானது ஏதேனும் இருப்பின், அதனைத் தொடர்புடைய இறக்குமதியாளருக்கு வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சந்தன புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்கள் ஒரு மாதத்திற்கும் மேலாகத் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படவில்லை எனில், அது தொடர்பில் துறைமுகக் கட்டுப்பாட்டாளர் இலங்கைச் சுங்கத்திற்கு அறிவிக்க வேண்டும்.
தற்போது வரை விடுவிக்கப்படாத வாகனங்கள் தொடர்பில் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய எதிர்காலத்தில் அவற்றினை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளானது மேற்கொள்ளப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இருப்பினும், நியாயமான காரணத்தால் குறித்த வாகனங்களினை விடுவித்துக்கொள்ள முடியாமல் போயுள்ளதாக ஏதேனும் இறக்குமதியாளர் அறிவிக்கும் பட்சத்தில், அது தொடர்பில் பரிசீலிப்பதற்கான வாய்ப்புள்ளது என இலங்கை சுங்கத்தினுடைய ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.