11 பேர் கடத்தல் வழக்கு: சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள மு...
News
11 பேர் கடத்தல் வழக்கு: சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி!
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 11 பேர் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில், முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டில் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபரான முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சிக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை தொடர்பான வழக்கில், மூன்றாவது சந்தேகநபராக முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை பெயரிடுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த வழக்குத் தேவையான ஜூலை 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சந்தேகநபருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.