New Updates! Fresh news just arrived.

11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: இளைஞன் கைது

News

11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: இளைஞன் கைது

April 16, 2026 5:26 pm
11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: இளைஞன் கைது
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுளிபுரம் பகுதியில் 11 வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
நேற்று (ஏப்ரல் 15) மாலை 5:00 மணியளவில், சுளிபுரம், வேறம் முல்லைப் பகுதியைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த 26வயதுடய இளைஞனால் கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

நடவடிக்கை:
பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் உடனடியாகச் செயற்பட்டு சந்தேக நபரான குறித்த இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தற்போதைய நிலை:
பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக சிகிச்சைக்காகவும், மருத்துவ பரிசோதனைகளுக்காகவும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now