இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 இலட...
News
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 இலட்சம் ரூபாபெறுமதியான 116 கிலோ கஞ்சா பறிமுதல்!
இலங்கைக்கு அருகிலுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தின் கடல் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் மற்றும் மஞ்சள் உள்ளிட்டவைகளும் அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன.
இதனை தடுக்க தமிழ்நாடு அனைத்து பாதுகாப்பு பிரிவினரும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு அவ்வப்போது கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த திட்டமிட்டு இருப்பதாக சுங்கத்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் குறித்த பகுதியில் கடந்த சில நாட்களாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சூழ்நிலையில் இன்று அதிகாலை அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் தோப்பு வலசை கடற்கரை பகுதியில் வாகனம் ஒன்றில் வந்த சிலர் பொதிகளை இறக்கி வைத்து விட்டு சென்றிருப்பதாக தகவல் கிடைக்க பெற்றதை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இலங்கைக்கு கடத்துவதற்காக தோப்புலசை கடற்கரை பகுதியில் ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகளினை அதிகாரிகள் கைப்பற்றினர்.
குறித்த பொதிகளை சுங்கத்துறை துணை இயக்குனர் பிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள் அலுவலகத்திற்கு கொண்டு சென்று நிறுத்தபோது 116 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு இலங்கை பெறுமதியில் ரூ.3 கோடி என்று கூறப்படுகிறது.
கஞ்சா கடத்தல் முயற்சியில் ஈடுபடுபவர்களை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த கடற்கரை பகுதிக்கு செல்லுகின்ற வழியில் சில இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் கடத்தல்பேர்வழிகளினை கண்டறியும் பணியில் சுங்கத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 116 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பு.கஜிந்தன்