119 குடும்பத்தினருக்குக் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு அழ...
News
119 குடும்பத்தினருக்குக் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு அழைப்பு: இதுவரைக்கும் 11,000 பேரிடம் விசாரணை!
காணாமல் போனவர்களினுடைய பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு (OMP) இன்று காலை அழைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்திப்பின் போது, தசாப்த காலங்களாக உறவுகளினை தொலைத்துவிட்டுத் தவிக்கும் குடும்பங்களினுடைய பரிதவிப்பும், அலுவலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளினுடைய நிலைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
"1990ஆம் ஆண்டு எட்டாம் மாதம் இரண்டாம் திகதி வீட்டைவிட்டு அழைத்துச் சென்றவர் அதன்பின்பு திரும்பவில்லை. கிடைக்கும் வரை நாங்களும் இந்த இடமெல்லாம் தேடித் திரிகின்றோம். ஒரு முடிவுமே இல்லாமல் முப்பத்தி ஆறு வருடமாக என் புருஷனைக் காணவில்லை" எனத் துயரம் நிறைந்த குரலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினை சேர்ந்த பெண் ஒருவர் தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.
குறித்த நிகழ்வு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினுடைய ஆணையாளர், சட்டத்தரணி வடிவேல் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
எமது அலுவலகத்திடம் சுமார் 25,000 பேரை உள்ளடக்கிய காணாமல் ஆக்கப்பட்டோரினுடைய பட்டியலுள்ளது.இரட்டைப் பதிவு போன்ற சரிபார்ப்புகளுக்குப் பின்னர் தற்போது எங்களிடம் 17,000 பேரினுடைய தரவுகள் உள்ளன.குறித்த 17,000 பேரில் இதுவரைக்கும் ஏறக்குறைய 11,000 பேரிடம் முதற்கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூபா 2 இலட்சம் வழங்கப்படுவதோடு, அவர்களுக்கு என்ன நடந்தது என்பதினை கண்டறியும் தொடர் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு சில நிறுவனங்களும் தனிநபர்களும் காணாமல் ஆக்கப்பட்டோரினுடைய குடும்பத்தினரிடம் இருந்து மூல ஆவணங்களினை சேகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், OMP தனது பணிகளினை முன்னெடுக்கும் போது பிறப்புச் சான்றிதழ், காணாமல் ஆக்கப்பட்டவர்களினுடைய புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களின் சான்றுபடுத்தப்பட்ட பிரதிகள் அல்லது நிழற்படப் பிரதிகளினை மாத்திரமே சேகரிப்பதாகவும், பாதிக்கப்பட்டோரினுடைய மூல ஆவணங்களை எவரும் வழங்குவதைத் தவிர்க்குமாறும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்குறித்த நிகழ்வுகள் இரு நாட்களாக கல்முனை பிரதேச செயலாளர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் வியாழன் மற்றும் வெள்ளி( இன்று) வரைக்கும் நடைபெற்று வருவதோடு, பல்வேறு இடங்களில் இருந்தும் தமது உறவுகளினை நாட்டில் ஏற்பட்ட கடந்த கால அசாதாரண காலகட்டத்தில் குடும்ப உறவுகளினை இழந்த உறவுகள் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்