2 வருட ஆட்சியில் 12 சுமையளிக்கும் வரித் திருத்தங்கள் – மன...
News
2 வருட ஆட்சியில் 12 சுமையளிக்கும் வரித் திருத்தங்கள் – மனித உரிமைகள் மையம் சாடல்
இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த இரண்டு வருட காலத்தில், மக்களுக்குப் பாரிய சுமையை ஏற்படுத்தும் வகையில் 12 வரித் திருத்தங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் மையம் குற்றம் சாட்டியுள்ளது.
ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த மையம், சமூகத்தின் அனைத்து பொருளாதார நிலைகளிலும் உள்ள மக்களை இந்த வரித் திருத்தங்கள் ஏதோ ஒரு வகையில் பாதித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய வரித் திருத்தங்கள் காரணமாக பணவீக்கம் உயர்ந்துள்ளமையுடன், பணப்புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டு, வறுமை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், முதலீடுகள் வீழ்ச்சியடைந்து வெளிநாட்டு முதலீடுகள் கைவிடப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அந்த மையம் தெரிவிக்கிறது.
உணவுப் பொருட்கள் கொள்முதல், கல்வி, சுகாதாரம், போக்குவர/த்து மற்றும் இணையவழி (Online) வணிகங்கள் ஆகியவற்றிலும் இந்த வரி உயர்வு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் மையம் தெரிவித்துள்ளது.
அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் (NGOs) செயற்பாடுகள் மற்றும் சிறு, நடுத்தர அளவிலான வணிகங்களை (SMEs) இலக்கு வைத்தே இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகப் பேரளவிலான வணிகர்களுடன் ஒப்பிடுகையில், சிறு மற்றும் நடுத்தர வணிகர்களே இந்த வரித் திருத்தங்களால் கடுமையான அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட 12 முக்கிய வரித் திருத்தங்கள்:
மதுவரி/ சுங்கத் தீர்வை (2025 ஜனவரி): மதுபானம், சிகரெட், புகையிலை, இனிப்பு பானங்கள் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கான வரி 6% இனால் உயர்த்தப்பட்டது.
மின்சார வாகனங்கள் (EV) வரி (2025 பெப்ரவரி): மின்சார வாகனங்களுக்கான வரி விகிதங்கள் 100% (இரட்டிப்பாக) உயர்த்தப்பட்டன.
வாகன இறக்குமதி வரி (2025 பெப்ரவரி): சுங்க வரி விலக்குகள் நீக்கப்பட்டு 20% இறக்குமதி வரி அறிமுகப்படுத்தப்பட்டதுடன், 50% கூடுதல் வரியுடன் (Surcharge) மொத்த வரி 30% ஆக உயர்த்தப்பட்டது.
நிறுத்தி வைத்தல் வரி - (2025 ஏப்ரல்): வங்கி வைப்பு வட்டி மீதான வரி 5% இலிருந்து 10% ஆக இரட்டிப்பாக்கப்பட்டது. (குறைந்த வருமானம் பெறுவோர் சுய சான்றளிப்பு மூலம் விலக்கு பெறலாம்).
நிறுவன வருமான வரி (2025 ஏப்ரல்): மதுபானம், புகையிலை மற்றும் சூதாட்ட வணிகங்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கான வரி 40% இலிருந்து 45% ஆக உயர்த்தப்பட்டது.
சேவை ஏற்றுமதி வரி (2025 ஏப்ரல்): முன்னர் வரி விலக்கு அளிக்கப்பட்ட சேவை ஏற்றுமதிகள் மற்றும் வெளிநாட்டு வருமானங்களுக்கு அதிகபட்சமாக 15% வருமான வரி விதிக்கப்பட்டது.
சுங்க இறக்குமதி வரிகள் (2026 ஏப்ரல்): பழைய வரி முறைகள் திருத்தப்பட்டு 0%, 10%, 20% மற்றும் 30% என புதிய பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 30% உயர் வரி விதிக்கப்பட்டது.
வாகன சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி - (2026 மே): வாகன இறக்குமதிக்கு 2.5% சமூக பாதுகாப்பு வரி விதிக்கப்பட்டது.

வாகன இறக்குமதி கூடுதல் வரி (2026 மே): 30% சுங்க வரியுடன் 50% கூடுதல் வரி விதிக்கப்பட்டதால் மொத்த வரி 45% ஆக உயர்ந்தது. இது 2026 டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மூலதன லாப வரி (2026 ஜூன்): தனிநபர்கள் மற்றும் பங்கான்மைகளுக்கு 10% இலிருந்து 15% ஆகவும், அறக்கட்டளைகள் (Trusts), பரஸ்பர நிதிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு 10% இலிருந்து 30% ஆகவும் வரிகள் உயர்த்தப்பட்டன.
தொழில்முறை வல்லுநர்களின் நிறுத்தி வைத்தல் வரி (2026 ஜூன்): புகைப்படக் கலைஞர்கள், கலைஞர்கள், தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் சமூக ஊடக நிபுணர்கள் போன்றோரின் மாத வருமானம் ரூ. 100,000 ஐ விஞ்சினால் 5% வரி விதிக்கப்பட்டது.
டிஜிட்டல் சேவை VAT வரி (2026 ஜூலை): இலங்கையில் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு நிறுவனங்கள் வழங்கும் டிஜிட்டல் சேவைகளுக்கு 18% VAT வரி விதிக்கப்பட்ட போதிலும், இதன் நடைமுறைப்படுத்தல் இன்னும் முழுமையடையவில்லை.
இந்தநிலையில், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் உணவு, சுகாதாரம் (மருந்துகள் மற்றும் உபகரணங்கள்), கல்வி (பாடசாலை உபகரணங்கள்) மற்றும் தொழில்துறை (மீன்பிடி, விவசாயம், மூலப்பொருட்கள்) போன்ற அத்தியாவசியத் துறைகளை இலக்கு வைத்து வரித் திருத்தங்கள் மற்றும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் மையம் வலியுறுத்தியுள்ளது.