New Updates! Fresh news just arrived.

வெடிபொருளுக்கு இரையாகி 12 வயதுக் குட்டி யானை பலி: வனஜீவிக...

News

வெடிபொருளுக்கு இரையாகி 12 வயதுக் குட்டி யானை பலி: வனஜீவிகள் திணைக்களம் தீவிர விசாரணை!

September 18, 2026 11:39 am
வெடிபொருளுக்கு இரையாகி 12 வயதுக் குட்டி யானை பலி: வனஜீவிகள் திணைக்களம் தீவிர விசாரணை!
அம்பாறை மாவட்டம், மகாஓயா பிரதேசத்திற்குட்பட்ட புறநகர் கிராமம் ஒன்றில் ‘ஹக்க பட்டாஸ்’ (jaw-bomb) எனப்படுகின்ற வெடிபொருளுக்கு இரையாகி 12 வயதினை உடைய குட்டி யானை ஒன்று உணவோ நீரோ உட்கொள்ளாமல் பல நாட்கள் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

மனித மனங்களினை உலுக்குவதாக அமைந்துள்ள குறித்த சம்பவம் தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் மூத்த கால்நடை மருத்துவர் நிஹால் புஷ்பகுமார தெரிவிக்கையில், காட்டுப்பன்றிகள் போன்ற வனவிலங்குகளினை வேட்டையாடுவதற்காக வைக்கப்படும் குறித்த கொடிய பொறிகளில் சிக்கி யானைகள் எதிர்கொள்ளுகின்ற துயரம் வார்த்தைகளினால் விவரிக்க முடியாதது எனக் குறிப்பிட்டனர்.

குறித்த கொடிய வெடிபொருள் வாய்க்குள் வெடிப்பதினால் யானைகளினுடைய தாடை மற்றும் வாய் பகுதிகள் கடுமையாகச் சிதைந்துபோவதினால், ஏற்படும் கடுமையான வலி, காயம் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக குறித்த பிராணிகளினால் ஒரு துளி நீரைக் கூட அருந்த முடியாமல், யாருடைய உதவியுமின்றி மெல்ல மெல்ல மரணத்தினை தழுவுகின்றன.

இவ் வகையில், குறித்த குட்டி யானையும் எந்தத் தவறும் செய்யாத நிலையில், தீவிர வேதனையினை அனுபவித்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மனித சமூகத்தினையும் உலுக்கியுள்ளது.

கிழக்கு மாகாண வனவிலங்கு திணைக்களத்தினுடைய உதவிப் பணிப்பாளரான எச்.ஜி. விக்ரமதிலகவின் அறிவுறுத்தலின் பேரில், மகாஓயா வனஜீவிகள் யானை கட்டுப்பாட்டுப் பிரிவால் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளானது தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now