New Updates! Fresh news just arrived.

இந்தியா சென்ற 13 பேர் கைது!

News

இந்தியா சென்ற 13 பேர் கைது!

September 7, 2026 7:08 am
இந்தியா சென்ற 13 பேர் கைது!
காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் இந்தியாவின் நாகப்பட்டினம் சென்ற 13 பேர் சந்தேகத்தின் பேரில் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் துறைமுகத்தை சென்றடைந்த பின்னர் குறித்த 13 பேரின் நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவர்கள் வழங்கிய தகவல்களில் முரண்பாடுகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து குறித்த நபர்களை மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு திரும்பிய 13 பேரையும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹல்துமுல்ல, மாம்பிட்டிய, கருங்கொடித்தீவு, மதவாச்சி, மொனராகலை, மாவடிச்சேனை, பொத்துவில், பலாங்கொடை, பதுளை மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், அவர்களை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now