New Updates! Fresh news just arrived.

யாழ்.பொது நூலக நிறுவுநர் கே.எம்.செல்லப்பாவின் 130 ஆவது ஜன...

News

யாழ்.பொது நூலக நிறுவுநர் கே.எம்.செல்லப்பாவின் 130 ஆவது ஜனன தினம்!

February 24, 2026 9:09 pm
யாழ்.பொது நூலக நிறுவுநர் கே.எம்.செல்லப்பாவின் 130 ஆவது ஜனன தினம்!
யாழ்.பொது நூலக நிறுவுநரான கனகசபை முதலித்தம்பியார் செல்லப்பாவினுடைய 130 ஆவது ஜனன தினமானது யாழ்.பொது நூலகத்தில் இன்று (24) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளரான கிஷ்னேந்திரன், யாழ்.நூலகர், உதவி நூலகர் மற்றும் நூலக பணியாளர்கள், வாசக வட்டத்தினர் மற்றும் கே.எம்.செல்லப்பாவினுடைய உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

புத்தூர் செல்லப்பா என்று அழைக்கப்படும் கனகசபை முதலித்தம்பியார் செல்லப்பா,1933 ஆம் ஆண்டில் புத்தூரில் தன்னிடம் இருந்த நூல்களினைக்கொண்டு சிறியதொரு நூலகத்தினை ஆரம்பித்தார்.

அதன்பின்னார், 1934 ஆண்டு ஜூன் மாதம் பொது நூலகம் அமைப்பதற்கான குழு அமைக்கப்பட்டிருந்தது.

அதற்காக, தன்னிடம் இருந்த நூல்களினையும், பலரிடமும் சேர்த்த ஆயிரத்து 184 ரூபா 22 சதம் பணத்தினையும் வழங்கினார்.

பின்னர் யாழ்.வைத்தியசாலை அருகில் வாடகை வீட்டில் 844 நூல்களோடு, 34 பருவ இதழ்களுடனும் நூலகம் இயங்கியது.

1935 இல் யாழ்.பட்டினசபையினை பொறுப்பேற்றதினை தொடர்ந்து வாடி வீட்டிற்கு நூலகம் மாற்றப்பட்டிருந்தது.

அதன்பின்னர் 1953 ஆம் ஆண்டில் தற்போதுள்ள இடத்தில், திராவிட கலையம்சம் பொருந்திய அறிவுக்கோயிலாக அமைக்கப்பட்டிருந்தது.

கே.எம் .செல்லப்பா 1896 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி பிறந்திருந்தார்.

யாழ்ப்பாண நீதிமன்றத்தில் காரியதரிசியாக பணியாற்றியதோடு, தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் புலமையாளராகவும் திகழ்ந்திருந்த அவர், 1958 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 24 ஆம் திகதி மறைந்தார்.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now