ஜப்பானிடமிருந்து 1.33 மில்லியன் டொலர் நிதி உதவி!
News

'டித்வா' புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தினை இழந்த கிழக்கு மாகாண நன்னீர் மீனவர்களினுடைய வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக, ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியினை வழங்கியுள்ளது.
இது குறித்தான ஒப்பந்தமானது நேற்று முன்தினம் (29) கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கையெழுத்தாகியுள்ளது.
குறித்த திட்டத்திற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளினை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பானது வழங்கவுள்ளது.
குறித்த ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமடா (Akio Isomata) மற்றும் ஐக்கிய நாடுகளினுடைய உணவு மற்றும் விவசாய அமைப்பின் வதிவிடப் பிரதிநிதி விம்லேந்திர சரண் (Vimlendra Sharan) ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
குறித்த திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நீர்நிலைகளில் 200 மீன் கூடுகள் அமைக்கப்படவுள்ளன.
தொடர்புடைய நீர்நிலைகளுக்குத் தேவையான மிதக்கும் வலை அமைப்புகளினை வழங்குவதற்கும், கிழக்கு மாகாணத்தினுடைய இங்கிநியாகல மீன் இனப்பெருக்க மையத்தின் வசதிகளினை மேம்படுத்துவதற்குத் தேவையான ஹார்மோன்கள் மற்றும் இரசாயனப் பொருட்களினை வழங்குவதற்கும் குறித்த திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், மீனவர் சங்கங்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு குறித்த மீன் கூடுகள் தொடர்பான தொழில்நுட்ப பயிற்சி திட்டங்களினை நடத்துவதும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
முதலாவது மீன் வளர்ப்புச் சுற்றுக்குத் தேவையான மீன் குஞ்சுகள் மற்றும் மீன் தீவனங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் கடற்றொழில் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.