இதுவரை 14 பேர் உயிரிழப்பு! 48 மணி நேரம் காய்ச்சல் நீடித்...
News
இதுவரை 14 பேர் உயிரிழப்பு! 48 மணி நேரம் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவரை நாடவும்
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட மருத்துவநிபுணர் பிறிசில்லா சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அபாயகரமான நிலைமை குறித்து விளக்கமளித்தார்.
விசேட வைத்திய நிபுணர் வழங்கிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை 27,754 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். குறிப்பாக
கொழும்பு, கம்பஹா ,களுத்துறை , காலி , மாத்தறை , இரத்தினபுரி , கண்டி ஆகிய மாவட்டங்களில் டெங்குப் பரவல் மிக அதிக மட்டத்தில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால், நாட்டின் அனைத்து 25 மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த மட்டத்திலேயே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வீடுகளைக் காட்டிலும் பொது இடங்களிலேயே நுளம்புப் பெருக்கம் அதிகளவில் அவதானிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் தெரிவித்தார்.
குறிப்பாக பாடசாலைகள் , மத வழிபாட்டுத் தலங்கள் , அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் , வேலைத்தளங்கள் ஆகியவற்றிலேயே அதிகளவு டெங்கு நுளம்புகள் பரவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
காய்ச்சல் நிலைமை காணப்பட்டால் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். 48 மணித்தியாலங்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் உடனடியாக தகுதியான மருத்துவரை நாட வேண்டும்.
தாய்மார், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.