New Updates! Fresh news just arrived.

ஐக்கிய அரபு இராஜ்ஜிய பயங்கர விபத்தில்14 பேர் பலி!

News

ஐக்கிய அரபு இராஜ்ஜிய பயங்கர விபத்தில்14 பேர் பலி!

November 13, 2026 9:51 am
ஐக்கிய அரபு இராஜ்ஜிய பயங்கர விபத்தில்14 பேர் பலி!
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் புஜைரா நகரில் உள்ள ஷேக் கலீபா பின் சைத் பகுதியில் நேற்று (12) இரவு ஏற்பட்ட கோர லொறி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான லொறியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாததால், அது மேலும் பல வாகனங்கள் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கோர விபத்தில் இந்தியர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தினைத் தொடர்ந்து லொறியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அது ஏனைய வாகனங்களுக்கும் பரவியதால் உயிர் சேதங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக நெரிசல் காரணமாக மெதுவாக ஊர்ந்து சென்ற வாகனத் தொடரணி மீது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி மோதி கவிழ்ந்ததன் காரணமாகவே இந்தப் பேரழிவு நேர்ந்துள்ளதாகப் புஜைரா பொலிஸார் அறிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now