14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு 30 வரு...
News
14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை!
14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பிலான வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள நபருக்கு கல்முனை மேல் நீதிமன்றம் 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது .
இதன்படி, குறித்த வழக்கானது கல்முனை மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றிருந்தது.
திங்கட்கிழமை (02) குறித்த வழக்கின் அவரது (கல்முனை மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி) தீர்ப்பினை கல்முனை மேல் நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி அண்டனிப்பிள்ளை ஜூட்சன் வாசித்தார்.
2020 தொடக்கம் 2021 வரையம் குறித்த சிறுமி 3 தடவைகள் வரை பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாகி வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதோடு, சிறுமி கர்ப்பமடைந்து ஆண் குழந்தை ஒன்றினையும் பிரசவித்துள்ளார். இந்நிலையில், 27 வயதுடைய குறித்த குற்றவாளி பாதிக்கப்ட்ட சிறுமியினுடைய சகேதரியின் கணவர் என்பதோடு, அவர் இரண்டு பிள்ளைகளினுடைய தந்தையுமாவார்.
குறித்த வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ஜெயராம் ரொக்சியினுடைய தீர்ப்பினை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அண்டனிப்பிள்ளை ஜூட்சன் மன்றில் அறிவித்தார்.
இதன்படி, மனுதாரர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் ஆஜராகி இருந்தார்.இதன் போது ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் ரூபா 10 ஆயிரம் தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.
அத்தோடு, குறித்த தண்டப்பண தொகையினை செலுத்த தவறும் பட்சத்தில் 6 மாத கால சாதாரண சிறைத் தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபா நஸ்டஈடு தொகையும் வழங்கப்பட வேண்டும் என்றும் அதனை செலுத்த தவறின் 1 மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் நஸ்டஈடு செலுத்தாத விடத்து 3 குற்றச்சாட்டிற்கும் தலா 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் ஒன்றன் பின் ஒன்றாக கழிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பாறுக் ஷிஹான்