New Updates! Fresh news just arrived.

ஆழியவளையில் 14.5 கிலோ கிராம் கஞ்சா மீட்பு!

News

ஆழியவளையில் 14.5 கிலோ கிராம் கஞ்சா மீட்பு!

July 17, 2026 1:22 pm
ஆழியவளையில் 14.5 கிலோ கிராம் கஞ்சா மீட்பு!
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளைப் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து 14.5 கிலோ கிராம் கஞ்சா சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டு மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

ஆழியவழைப் பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் பொதிகள் காணப்பட்டதை தொடர்ந்து மக்களால் யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடி படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அடிப்படையில் அங்கு சென்றிருந்த யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் கஞ்சா பொதிகளை கைப்பற்றி மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

எனும் குறித்த கஞ்சா பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பான விசாரணகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now