New Updates! Fresh news just arrived.

அம்பாறையில் காட்டு யானை தாக்கியதில் 15 வயது மாணவன் காயம் ...

News

அம்பாறையில் காட்டு யானை தாக்கியதில் 15 வயது மாணவன் காயம்

October 3, 2026 9:55 am
அம்பாறையில் காட்டு யானை தாக்கியதில் 15 வயது மாணவன் காயம்
அம்பாறையில் காட்டு யானை தாக்கியதில் 15 வயது மாணவன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (2) அதிகாலை கிட்டங்கி பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

நற்பிட்டிமுனை - சேனைக்குடியிருப்புப் பகுதியில் இருந்து மத்திய முகாம் பிரதேசத்தை நோக்கிச் குறித்த மாணவன் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே, வீதிக்குக் குறுக்கே வந்த காட்டு யானை திடீரெனத் தாக்கியுள்ளது.

யானையின் தாக்குதலில் காயமடைந்த மாணவன் உடனடியாக மீட்கப்பட்டு, கல்முனை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிட்டங்கி மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாய கிராமப்புற வீதிகளில் அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றது.

இதனால் அப்பாதையைப் பயன்படுத்தும் பாடசாலை மாணவர்கள் மற்றும் விவசாயிகள் தினமும் பெரும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் நிலவுவதாகப் பிரதேச பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now