New Updates! Fresh news just arrived.

16 வயது சிறுவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை

News

16 வயது சிறுவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை

November 10, 2026 11:25 am
16 வயது சிறுவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை
மாத்தறையல் கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 18 ஏக்கர் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்டு பலத்த காயமடைந்த சிறுவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று 9 ஆம் திகதி இரவு வேளையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, தெவிநுவர பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனுக்கும் பிறிதொரு குழுவுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு முற்றியதே இந்தக் கொலைக்குக் காரணமாகும் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தற்போது பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய, இச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகக் கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now