இரண்டு மாதங்களில் 17,506 போதைப்பொருள் பகுப்பாய்வு அறிக்கை...
News
இரண்டு மாதங்களில் 17,506 போதைப்பொருள் பகுப்பாய்வு அறிக்கைகள்!
கடந்த இரண்டு மாதங்களில் போதைப்பொருள் தொடர்பாக 17,506 இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
குருவிட்ட சிறைச்சாலையில் நேற்று (01) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஓகஸ்ட் மாதத்தில் 9,061 அறிக்கைகளும் செப்டம்பர் மாதத்தில் 8,445 அறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவாக வெளியிடுவதற்கும், தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.