19 ஆண்டுகால விசாரணை: 5 பேருக்கு மரண தண்டனை!
News

19 ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு, ஒருவரைக் தடியால் அடித்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 5 சந்தேக நபர்களுக்கு மரண தண்டனை விதிக்குமாறு பாலபிட்டிய உயர் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன்கள் உட்பட ஐந்து உறவினர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள், பத்தடுவ, பத்தபொலவைச் சேர்ந்த ஒருவரைக் கொலை செய்திருந்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் 2007, ஜூலை 29 ஆம் திகதி அல்லது அதற்குச் சற்று முன்னும் பின்னுமாக இந்தக் கொலையைச் செய்துள்ளதாகவும், இது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ள பாலபிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்துள்ளார்.