New Updates! Fresh news just arrived.

கட்டாரில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு 197 ம...

News

கட்டாரில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு 197 மில்லியன் ரூபா இழப்பீடு!

January 24, 2026 10:21 am
கட்டாரில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு 197 மில்லியன் ரூபா இழப்பீடு!
கட்டாரில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த இலங்கையர்களினுடைய குடும்ப உறவினர்களுக்காக, 197 மில்லியன் ரூபாவுக்கும் அதிக இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக்கொடுக்க தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகமானது 2025 ஆம் ஆண்டில் நடவடிக்கை எடுத்துள்ளது.

தூதரகத்தினால் இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகையான 197,719,710.36 ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 23,641,182.00 ரூபா பணம் தூதரகத்தின் மூலமாக நேரடியாக உரிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய 174,078,528.36 ரூபா பணம், இலங்கையில் உள்ள குடும்ப உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விசேடமாக, 2014 ஆம் ஆண்டு தொடக்கம் தீர்க்கப்படாமல் இருந்த சில வழக்குகள் குறித்தான இழப்பீட்டுத் தொகைகளினையும் இம்முறை பெற்றுக்கொள்ள முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், கடந்த 2024 ஆம் ஆண்டிலும் குறித்த தூதரகம் 172 மில்லியன் ரூபாவுக்கும் அதிக இழப்பீட்டுத் தொகையினை இலங்கை குடும்பங்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now