அம்பாறை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு: மகளும் தாயும் படுகாய...
News
அம்பாறை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு: மகளும் தாயும் படுகாயம்!
டிப்பர் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தின் புறநகர் பகுதியான புத்தங்கல நான்கு வழி சந்தி பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதோடு, படுகாயமடைந்த நிலையில் இருவர் அம்பாறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை (26) இரவு சுமார் 8.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் மூன்று சக்கர வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அதில் பயணம் செய்த மூன்று பேரில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோடு, ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் உயிர் தப்பினர்.
குறித்த விபத்தின் போது டிப்பர் வாகனம் புத்தங்கல பகுதியிலிருந்து பிலிமகல நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் அதே சமயம் முச்சக்கர வண்டி பண்டாரநாயக்க பாலிகா வித்தியாலயப் பகுதியில் இருந்து அம்பாறை பொது மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்ததாக விபத்தை நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.
அத்தோடு, குறித்த விபத்தின் போது டிப்பர் வாகன சாரதி வழிவிடும் விதியினை மீறியதால் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி டிப்பர் மீது மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன் குறித்த விபத்தை தொடர்ந்து டிப்பர் வாகன சாரதி வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் சென்று அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இவ்வாறு பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.
முச்சக்கர வண்டி சாரதி விபத்தின் போது சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவர் அம்பாறை நவகம்புர பகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு, படுகாயமடைந்த அம்பாறை லயன்ஸ் கழகத்தைச் சேர்ந்த துலஞ்சன இமேஷ் அம்பாறை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும் நவகம்புர லயன்ஸ் கழகத்தினை சேர்ந்த சுதேஷ் மஹின்சாவும் அவரது மூன்று வயது மகள் ஹசரி லியாராவும் அம்பாறை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு, விபத்தில் மருத்துவமனையில் உயிரிழந்த சுதேஷ் மஹின்சாவின் கணவர் துலஞ்சனா இமேஷ் எனவும பொலிஸார் தெரிவித்தனர்.
இது தவிர விபத்தின் போது டிப்பர் வாகன சாரதி மதுபோதையில் இருந்தது தற்போதைய விசாரணையில் தெரியவந்திருப்பதாக அம்பாறை மாவட்ட தலைமையக பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் தெரிவித்தார்.
குறித்த சாரதியின் கவனக்குறைவால் தான் விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன். குறித்த சாரதி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாறுக் ஷிஹான்