New Updates! Fresh news just arrived.

பெற்றோலை அதிகளவில் பதுக்கியவருக்கு 2 மாத கால கட்டாயச் சி...

News

பெற்றோலை அதிகளவில் பதுக்கியவருக்கு 2 மாத கால கட்டாயச் சிறைத் தண்டனை!

March 20, 2026 8:30 am
பெற்றோலை அதிகளவில் பதுக்கியவருக்கு  2 மாத கால கட்டாயச் சிறைத் தண்டனை!
பெற்றோல் விற்பனை செய்வதற்கான முறையான அனுமதிப்பத்திரம் இன்றி, லொறி ஒன்றில் 65 லீட்டர் பெற்றோலை வைத்திருந்த நபருக்கு 2,500 ரூபாய் அபராதமும் 2 மாத கால கட்டாயச் சிறைத் தண்டனையும் விதித்து கல்கிசை நீதவான் பசான் அமரசேன நேற்று(19) உத்தரவிட்டுள்ளார்.

கல்கிசை, படோவிட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இருந்து அதிகளவு எரிபொருளைப் பெற்றுக்கொண்டதாக வெள்ளவத்தை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று முன்தினம் (18) இரவு அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், லொறியில் இருந்த 4 எரிபொருள் கலன்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட எரிபொருளின் மொத்த மதிப்பு சுமார் 20,000 ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now