New Updates! Fresh news just arrived.

ஊடகவியலாளர்களுக்கு சுவிட்சர்லாந்தில் 2 வருட வேலைவாய்ப்பு:...

News

ஊடகவியலாளர்களுக்கு சுவிட்சர்லாந்தில் 2 வருட வேலைவாய்ப்பு: சிலோன் மீடியா போரம் உத்தியோகபூர்வ கோரிக்கை!

June 14, 2026 4:39 pm
ஊடகவியலாளர்களுக்கு சுவிட்சர்லாந்தில் 2 வருட வேலைவாய்ப்பு: சிலோன் மீடியா போரம் உத்தியோகபூர்வ கோரிக்கை!
இலங்கை ஊடகவியலாளர்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில், சுவிட்சர்லாந்து நாட்டில் இரண்டு வருட கால ஒப்பந்த அடிப்படையில் தொழில் வாய்ப்புக்களை வழங்குமாறு சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிரி வால்ட்யிடம் உத்தியோகபூர்வ கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

பாதுகாப்பான மற்றும் சட்ட ரீதியான புலம்பெயர்வு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட சந்திப்பொன்று சனிக்கிழமை (13) அம்பாறை மாவட்டம் மருதமுனை தனியார் விடுதியில் நடைபெற்ற போது இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனம் (ICMPD) ஆகியன இணைந்து இந்த முக்கிய கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன.

இலங்கைக்கான ICMPD நிறுவனத்தின் இணைப்பாளர் சாமிர் ஸாலிஹ் தலைமையேற்று நடத்திய இச்செயலமர்வில், சுவிஸ் தூதுவர் கலாநிதி சிரி வால்ட் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இச்சந்திப்பில் தூதுவரிடம் நேரடியாகக் கோரிக்கை விடுத்த சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

"இலங்கைஉள்ள ஊடகவியலாளர்கள் தற்காலத்தில் பல்வேறு பொருளாதார சவால்களுக்கு மத்தியில் தமது, ஊடகப் பணியை ஒரு சேவையாகவே அர்ப்பணிப்போடு வழங்கி வருகின்றனர். அவர்களினுடைய வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தினையும் வலுப்படுத்துவது காலத்தின் தேவையாகும்."

இதனைக் கருத்திற்கொண்டு, தகுதியான ஊடகவியலாளர்களுக்கு சுவிட்சர்லாந்தில் இரண்டு வருட கால ஒப்பந்த அடிப்படையில் சட்டபூர்வமான வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தர தூதரகம் முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now