2026/27 பெரும்போக நெல் பயிர்ச்செய்கை: மண்டல வாரியாக தொடக்...
News
2026/27 பெரும்போக நெல் பயிர்ச்செய்கை: மண்டல வாரியாக தொடக்கத் திகதிகள் முன்மொழிவு!
2026/27 ஆம் ஆண்டுக்கான பெரும்போக நெல் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான மண்டல வாரியான கால அட்டவணை முன்மொழியப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெறும் நீர் வளத்தை முறையாகப் பயன்படுத்தி, நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திகதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வளவை மண்டலத்தில் எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்க முன்மொழியப்பட்டுள்ளது. எல மண்டலத்தில் ஒக்டோபர் 15ஆம் திகதியும், கவுடுல்ல மண்டலத்தில் நவம்பர் 01ஆம் திகதியும், எலஹெர மண்டலத்தில் நவம்பர் 10ஆம் திகதியும் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையான காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் குறைந்தளவான மழைவீழ்ச்சியே எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், நீர் வளத்தை அதிகபட்சமாகப் பாதுகாத்து பயன்படுத்துவதற்கு ஒக்டோபர் மாத ஆரம்பத்திலேயே நெல் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பது சாதகமாக இருக்கும் என நீர் மேலாண்மை செயலகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, எல்நினோ நிலைமையின் தாக்கத்தால் வானிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் விவசாய நடவடிக்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. எனவே, எதிர்பார்க்கப்படும் வானிலை மாற்றங்களை கருத்திற்கொண்டு விவசாயிகள் தங்களது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இம்முறை பெரும்போக நெல் பயிர்ச்செய்கைக்குத் தேவையான உரம் போதுமான அளவில் கையிருப்பில் இருப்பதாக தேசிய உரச் செயலகம் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவில் விதை நெல் கையிருப்பில் இருப்பதை விவசாயத் திணைக்களமும் உறுதிப்படுத்தியுள்ளது.
2026/27 பெரும்போகத்தில் சுமார் 8 இலட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெல் பயிரிடுவதற்கு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
விவசாயிகளுக்கான தொழில்நுட்பப் பரிந்துரைகளுக்கு ஏற்ப சரியான காலப்பகுதியில் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமானது என விவசாய, கால்நடை, நில மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த வலியுறுத்தியுள்ளார்.
மேலும், விவசாயத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை விவசாயிகள் பின்பற்றுவதற்கு தேவையான ஊக்குவிப்புகளை வழங்குவதுடன், அது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் விரிவுபடுத்த வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2026/27 பெரும்போகத்திற்கான பயிர்ச்செய்கை நடவடிக்கைகளைத் திட்டமிடுவது தொடர்பான முன்ஆயத்தக் கலந்துரையாடல் அமைச்சர் கே.டி. லால் காந்த தலைமையில் நேற்று (08) கொவிஜன அரங்கில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் வளிமண்டலவியல் திணைக்களம், நீர் மேலாண்மை செயலகம், நீர்ப்பாசனத் திணைக்களம், இலங்கை மகாவலி அதிகாரசபை, விவசாயத் திணைக்களம், விவசாய அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் தேசிய உரச் செயலகம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதுதொடர்பில் விவசாய மற்றும் கால்நடைப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், தற்போது முன்வைக்கப்பட்டுள்ளவை இறுதி முடிவுகள் அல்ல என்றும், இவை ஆரம்பகட்ட முன்மொழிவுகள் மட்டுமே என்றும் குறிப்பிட்டார்.
இந்த முன்மொழிவுகள் தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் திகதி கன்னோருவையில் நடைபெறவுள்ள இறுதிக் கலந்துரையாடலின் பின்னரே மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.