2027 ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெள...
News
2027 ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
2027ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நேற்று (21) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சரவை அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள இந்த சட்டமூலத்தின் அடிப்படையில், அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த செலவினம் சுமார் ரூ. 4.99 டிரில்லியன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டமூலத்தின் முதலாம் வாசிப்பு ஒக்டோபர் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12ஆம் திகதி இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 13 முதல் 20ஆம் திகதி வரையும், குழுநிலை விவாதம் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளது.