New Updates! Fresh news just arrived.

2027 பாடசாலை மற்றும் பரீட்சை கால அட்டவணை வெளியீடு!

News

2027 பாடசாலை மற்றும் பரீட்சை கால அட்டவணை வெளியீடு!

August 21, 2026 4:07 pm
2027 பாடசாலை மற்றும் பரீட்சை கால அட்டவணை வெளியீடு!
2027 ஆம் ஆண்டினுடைய பாடசாலை தவணை அட்டவணை, அரச விடுமுறை நாட்கள் மற்றும் பிரதான பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதிகள் அடங்கிய சுற்றறிக்கையினை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கைக்கு அமைய, 2027 ஆம் ஆண்டில் அரச விடுமுறை நாட்கள் மற்றும் பரீட்சை அட்டவணைகளினை கருத்திற் கொண்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களினை 197 நாட்களுக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை 2027 ஜனவரி 4 திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2027 ஏப்ரல் 09 திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.

இரண்டாம் தவணை 2027 ஏப்ரல் 26 திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2027 ஜூலை 30 வரைக்கும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மூன்றாம் தவணை 2027 ஒகஸ்ட் 30 திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2027 டிசம்பர் 03 வெள்ளிக்கிழமை வரைக்கும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையாக:

முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் தவணைகளானது பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படும்.

இதன்படி, க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதத்திலும், சாதாரண தரப் பரீட்சையானது - 2027 டிசம்பர் மாதத்திலும் நடைபெறவுள்ளது

மேலும், விசேட காரணங்களுக்காக ஏதேனும் ஒரு பாடசாலை நாளானது மூடப்பட நேரிட்டால், அதற்குப் பதிலாக மாற்று வகுப்புகளானது நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now