New Updates! Fresh news just arrived.

2027 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு! - Gu...

News

2027 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு!

October 2, 2026 7:16 am
2027 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு!
2027ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா இணைந்து நடத்தும் இந்தத் தொடர், 2027 ஒக்டோபர் 2 முதல் நவம்பர் 21 வரை நடைபெறவுள்ளது.

14 அணிகள் பங்கேற்கும் தொடரில், அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இலங்கை B குழுவில் இடம்பெற்றுள்ளதுடன், பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளும் அதில் உள்ளன.

A குழுவில் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடம்பெற்றுள்ளன. இரு குழுக்களிலும் தலா ஒரு இடம் தகுதிச் சுற்று மூலம் நிரப்பப்படவுள்ளது.

அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இறுதிப் போட்டி நவம்பர் 21ஆம் திகதி ஜோகன்னஸ்பேர்க்கில் இடம்பெறவுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now