New Updates! Fresh news just arrived.

சுகாதார சேவையில் 213 பேர் புதிதாக இணைப்பு!

News

சுகாதார சேவையில் 213 பேர் புதிதாக இணைப்பு!

January 26, 2026 1:27 pm
சுகாதார சேவையில் 213 பேர் புதிதாக இணைப்பு!
அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிகளுக்காக 213 பேருக்கு நாளை (27) நியமனக் கடிதங்களானது வழங்கிவைக்கப்படவுள்ளன.

குறித்த பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையானது கடந்த 2025 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

இருந்த போதிலும், இது இதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இதன்படி, அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு 226 பேரினை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்திருந்த இருந்தபோதிலும், திறந்த போட்டிப் பரீட்சையின் ஊடாக தகுதி பெற்ற 246 பேர் நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு, குறித்த 213 பேர் அப்பதவிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளருக்கான பதவிக்கான அனுமதிக்கப்பட்ட ஆளணி 2,617 ஆக உள்ளதோடு, 1,906 பேர் தற்போது சுகாதார சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now